கல்லுரி வரையில் வாழ்க்கைக்கு பயிற்சி
காதலிக்க முயற்சி, மதுவின் சுவை
வேலை தேடும் அலைய்ச்சல்
முதல் சம்பளத்தின் சுவை
மணம்புரிய - நல்ல வரனாக முயற்சி
சிலருக்கு காதல் திருமணம்
பலருக்கு குடும்ப திருமணம்
மனய்வியை காதலித்தேன் !!
தேன் நிலவு முடிந்து கண் திறந்ததும்
எங்கிருந்தோ ஒரு தொட்டில்
பிள்ளையும் செலவும் வளர்ந்தது
பள்ளிக்கூடம் மாறிவிட்டது
இப்போதல்லாம் பெற்றோருக்கு தான் பரீட்சை
வாடகை வீடு போதாது, வங்கியுடன் சம்மந்தம்
தொட்டிலில் மீண்டும் ஒரு சலிப்பு
குடும்பஸ்தன் என்ற பதவி
வயதான பெற்றோர் குரலெழுப்ப
தலைமுரய்களின் இடையே ஒருவன்
நீரிழிவு இரத்த அழுத்தம் தான் சம்பாத்தியம்
ஒரு சம்பளம் போதாதென்று துணைவியார்
உலகம் - வீடு, அலுவலகம், பள்ளிகூடும், கோவில்
பிள்ளைகள் கல்லூரி, என்ன சத்தம அங்கே,
இதோ வந்திடின், இன்று நான் சமைய்க்கும் நாள்
உனக்காக வாழ்வதென்று !!
சய்ரஸ்